TNPSC Current Affairs - 2024-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருது
2024-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகளைப் பெறும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பெயர்களை சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது. இதில் தமிழ் எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன் தனது 'விஷ்ணு வந்தார்' சிறுகதைத் தொகுப்பிற்காக யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ளார். அதே போல் தமிழ் எழுத்தாளர் யூமா வாசுகி 'தன்வியின் பிறந்தநாள்' என்ற கதை தொகுப்பிற்காக பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
கே. வைஷாலி தனது "ஹோம்லெஸ்: க்ரோயிங் அப் லெஸ்பியன் அண்ட் டிஸ்லெக்ஸிக் இன் இந்தியா" என்ற நினைவுக் குறிப்பிற்காக கௌரவிக்கப்படுகிறார். கௌரவ் பாண்டே தனது "ஸ்மிருதியோன் கே பீச் கிரி ஹை பிருத்வி" என்ற கவிதைத் தொகுப்பிற்காக விருது பெறவுள்ளார்.
யுவ புரஸ்கார்
யுவ புரஸ்கார் விருது 10 கவிதை நூல்கள், 7 சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஒரு நாவல், ஒரு கஜல் புத்தகம் மற்றும் ஒரு நினைவுக் குறிப்பு ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.
லோகேஷ் ரகுராமன் (தமிழ்), நயன்ஜோதி சர்மா (அஸ்ஸாமி), சுதபா சக்ரவர்த்தி (பெங்காலி), ராணி பரோ (போடோ), ஹீனா சௌத்ரி (டோக்ரி) , ரிங்கு ரத்தோட் (குஜராத்தி), ஸ்ருதி பி.ஆர் (கன்னடம்), முகமது அஷ்ரப் ஜியா (காஷ்மீர்), அத்வைத் சல்கோன்கர் (கொங்கனி), ரிங்கி ஜா ரிஷிகா (மைதிலி), ஷியாம்கிருஷ்ணன் (மலையாளம்), வைகோம் சிங்கிங்கன்பா (மணிப்பூரி), தேவிதாஸ் சவுதாகர் (மராத்தி), சூரஜ் சபாகெய்ன் (நேபாளி), சஞ்சய் குமார் பாண்டா (ஒடியா), ரந்திர் (பஞ்சாபி), சோனாலி சுதார் (ராஜஸ்தானி) , அஞ்சன் கர்மாகர் (சந்தாலி), கீதா பிரதீப் ரூபானி (சிந்தி), ரமேஷ் கார்த்திக் நாயக் (தெலுங்கு) மற்றும் ஜாவேத் அம்பர் மிஸ்பாஹி (உருது) ஆகியோரும் யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
யுவ புரஸ்கார் விருது பெற்றவர்களுக்கு, செப்புப் தகடு அடங்கிய விருதும், 50,000 ரூபாய்க்கான காசோலையும் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்.
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions