TNPSC Current Affairs - ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) தரவுகளின்படி, ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு, மாவு, அழகுசாதனப் பொருட்கள், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி போன்ற பெரும்பாலான வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறைந்திருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 2017, ஜூலை 1-ல் அமலுக்கு வந்த நிலையில் சுமார் 7 ஆண்டுகளில் பொருட்களின் விலைகள் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஜிஎஸ்டிக்கு முன் (உலர்) மாவுக்கு 3.5% வரி இருந்ததாகவும், தற்போது அதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழகுசாதனப் பொருட்களுக்கு முன்பு இருந்த 28% வரி தற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், தேனுக்கு முன்பு இருந்த 6% வரிக்கு தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மொபைல் போன்களுக்கு 31.3% ஆக இருந்த வரி தற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி போன்ற மின் சாதனப் பொருட்களுக்கு முன்பு 31.3% வரி விதிக்கப்பட்டதாகவும், ஜிஎஸ்டியில் அது 18% ஆக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், தேங்காய் எண்ணெய், சோப், டூத் பேஸ்ட் ஆகியவற்றுக்கு முன்பு 27% வரி விதிக்கப்பட்ட நிலையில் அது தற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், எல்பிஜி ஸ்டவ்-க்கு முன்பு 21% வரி இருந்த நிலையில் தற்போது அது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions