பென் பின்ட்டர் விருது

‘பென் பின்ட்டர்’ விருது

  • ‘English PEN Pinter’ விருது 2009-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 

  • ஆங்கில பென் தொண்டு நிறுவனம் இலக்கியத்தைச் சிறப்பிக்கவும், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் நோபல் பரிசு பெற்ற நாடக ஆசிரியர் ஹெரால்ட் பின்ட்டர் நினைவாக வழங்கி வருகிறது.

  • இங்கிலாந்து, அயர்லாந்து குடியரசு அல்லது காமன்வெல்த் நாடுகளில் வசிக்கும் சிறந்த இலக்கியத் தகுதி கொண்ட எழுத்தாளருக்கு ஆண்டுதோறும் இந்த பரிசு வழங்கப்படுகிறது.

  • இந்த ஆண்டுக்கான விருதுக்கான நடுவர் குழுவில் ’ஆங்கில பென்’ தலைவர் ரூத் போர்த்விக், நடிகர் காலித் அப்தல்லா மற்றும் எழுத்தாளர் ரோஜர் ராபின்சன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

  • இதற்கு முன்பு மைக்கேல் ரோசன், மார்கரெட் அட்வுட், மலோரி பிளாக்மேன், சல்மான் ருஷ்டி, டாம் ஸ்டாபார்ட் மற்றும் கரோல் ஆன் டஃபி ஆகியோர் இந்த விருதை வென்றுள்ளனர்.

  • பிரிட்டன் நூலகத்தில் வருகிற அக்டோபர் 10 அன்று நடக்க இருக்கும் நிகழ்வில் அவருக்கு விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பென் பின்ட்டர்’ விருது 2024

  • இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு 2024 ஆண்டிற்கான மதிப்புமிக்க ‘பென் பின்டர்’ சர்வதேச விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் சர்வதேச புக்கர் பரிசு - அருந்ததி ராய்

  • இந்திய அளவில் எழுத்தாளராகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும் அறியப்படும் அருந்ததி ராய், இந்திய எழுத்தாளர்களில் முதல் புக்கர் பரிசை ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ எனும் தனது முதல் நாவலுக்காகப் பெற்றார்.

  • அருந்ததி ராயின் அச்சமற்ற, உறுதியான எழுத்துகளை கௌரவிக்கும் விதமாக ஆங்கில பென் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ‘பென் பின்ட்டர்’ விருது வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

  • சல்மான் ருஷ்டி, மார்கரெட் அட்வுட், டாம் ஸ்டாப்பர்ட் மற்றும் கரோல் ஆன் டஃபி ஆகியோர் இதற்கு முன்பு பின்ட்டர் பரிசு பெற்ற எழுத்தாளர்கள். சுற்றுச்சூழல் சீர்குலைவு முதல் மனித உரிமை மீறல்கள் வரை அனைத்துப் பிரச்னைகளிலும் அருந்ததி ராய் தனது கூர்மையான கருத்துகளை வெளிப்படுத்துவது, புறக்கணிக்கப்படுபவர்களுக்கு ஆதரவளிப்பது போன்றவை அவரது அர்ப்பணிப்பை நிரூபிக்கின்றது என்று நடுவர்கள் குறிப்பிட்டனர்.

  • இந்த விருது 'துணிவுமிக்க எழுத்தாளர்' ஒருவருடன் பகிரப்படும் என்றும், சொந்த பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கு பெரிய ஆபத்து ஏற்படும் நிலையிலும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது பகிர்ந்து வழங்கப்படும் என்றும் நடுவர் குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
Copyright@2020 Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com