TNPSC Current Affairs - உலகின் மிகப்பெரிய கடற்படை இராணுவப் பயிற்சி
‘ரிம் ஆஃப் தி பசிபிக்’ (ரிம்பேக்) பயிற்சி
உலகின் மிகப்பெரிய கடற்படை இராணுவப் பயிற்சியாகக் கருதப்படும் ரிம் ஆஃப் தி பசுபிக் (Rim of the Pacific) இராணுவப் பயிற்சி ஆரம்பமானது.
ஹவாய் தீவில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் 29 நாடுகள், 40 கப்பல்கள், 3 போா்க்கப்பல்கள், 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 25,000-க்கும் மேற்பட்ட கடற்படை வீரா்கள் பங்கேற்கின்றனா்.
இந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்காக தென் சீனக் கடல் மற்றும் வட பசிபிக் பெருங்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்தியாவின் பல்நோக்கு போா்க்கப்பலான ஷிவாலிக், போ்ல் ஹாா்பரைச் சென்றடைந்தது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தப் போா்க்கப்பல் எவ்விதமான சூழல்களிலும் சிறப்பாக இயங்கக்கூடிய திறன் படைத்தது.
நீா், நிலம் என பல்வேறு கட்டங்களாக ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஜூன் 27-ஆம் தேதி தொடங்கிய துறைமுகப் பயிற்சி ஜூலை 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதேபோல் 3 உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கடல்சாா் பயிற்சி நடத்தப்படவுள்ளது.
அதில் போா்க்கப்பல்கள், கடலில் உளவு பணியில் ஈடுபடும் விமானங்கள், கடற்படையைச் சோ்ந்த போா் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பங்கேற்கவுள்ளன.
நிகழாண்டுக்கான ரிம்பேக் பயிற்சியின் கருப்பொருள் ‘ஒருங்கிணைந்த மற்றும் தயாா்நிலையிலான கூட்டமைப்பு நாடுகள்’ என்பதாகும்.
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions