TNPSC Daily Current affairs - 01 March 2024
தமிழ்நாடு
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2024 பிப்ரவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 9,713 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் 11 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ. 8,774 கோடி வருவாய் கிடைத்தது.
தேசிய பிறப்பு குறைபாடு விழிப்புணர்வு மாதத்தின் கருப்பொருள் 2024 "தடைகளை உடைத்தல்: பிறப்பு குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான உள்ளடக்கிய ஆதரவு". பிறப்பு குறைபாடுகளை தடுத்தல், ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
எழுத்தாளார் அஸ்வகோஷ் என அறியப்படும் இராசேந்திரசோழன் உடல் நலக்குறைவால் காலமானார்.
இந்தியா
சர்வதேச பிக் கேட் கூட்டணியின் தலைமையகம் எந்த நாட்டில் நிறுவப்படும் - இந்தியா
நாட்டின் முதல் செமிகண்டக்டர் ஃபேப் எந்த மாநிலத்தில் நிறுவப்படும் - குஜராத்
உலகின் முதல் வேத கடிகாரத்தை எந்த நகரத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார் - உஜ்ஜைன் (மத்திய பிரதேசம்)
டாடா குழுமம் இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஃபேப் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கிறது - பவர்சிப் தைவான்.
கட்டமைப்பு திட்டமிடல் குழுவின் (NPG) 66-வது கூட்டம் 27 பிப்ரவரி, 2024 அன்று புதுதில்லியில், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) கூடுதல் செயலாளர் திரு ராஜீவ் சிங் தாக்கூர் தலைமையில் நடைபெற்றது.
கோவாவில் கடற்படை போர்க் கல்லூரியின் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2024 மார்ச் 5 அன்று திறந்து வைக்கிறார். நவீனக் கட்டிடம் சோழ வம்சத்தின் வலிமைமிக்க கடல்சார் பேரரசின் நினைவாக 'சோழர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
'பாதுகாப்பு துறையில் தற்சார்பை அடைவதன் ஒரு பகுதியாகவும், இந்தியாவில் உற்பத்தி செய்யும் (மேக்-இன்-இந்தியா) முன்முயற்சியை மேலும் ஊக்குவிக்கவும், பாதுகாப்பு அமைச்சகம் இன்று (மார்ச் 1, 2024) புதுதில்லியில் ரூ. 39,125.39 கோடி மதிப்புள்ள ஐந்து முக்கிய கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் புதுதில்லியில் இருந்து ரூ.1,000 கோடி மதிப்பிலான ஏழு உள்கட்டமைப்புத் திட்டங்களை மெய்நிகர் வடிவில் தொடங்கி வைத்தார்.
பிரதமர்திருநரேந்திரமோடியின்தொலைநோக்குபார்வையின்படி, 2047-ம்ஆண்டுவாக்கில் 'வளர்ந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை' உருவாக்கும்இலக்கைஅடைவதற்காக, மத்தியஅரசின்குறு, சிறு & மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் கேவிஐசி நவீன பயிற்சிக்குப் பிறகு மகாராஷ்டிராவின் கைவினைஞர்களுக்கு உயர்தர கருவிப் பெட்டிகளை வழங்கியது.
எரிசக்தி சேமிப்பு சட்டம்-2001-ன் விதிகளின் கீழ், மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் 22 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (மார்ச் 1) எரிசக்தி திறன் அமைப்பின் (பிஇஇ) என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன் 22-வது நிறுவன தினம் (மார்ச் 1, 2024) புதுதில்லியில் கொண்டாடப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜவுன்பூரில் ரூ.10,000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் 10 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்தியாவின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வான பாரத் டெக்ஸ் 2024, (பிப்ரவரி29, 2024) புதுதில்லியில்நிறைவடைந்தது.
உலகம்
ஒவ்வொரு ஆண்டும் உலக சிவில் பாதுகாப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது - மார்ச் 1
விளையாட்டு
வங்காளதேச பிரீமியர் லீக்; கோமிலா விக்டோரியன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பார்ச்சூன் பாரிஷால் அணி
முக்கிய நபர்கள்
மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி வி அனந்தபோஸ்.
மேற்கு வங்க முதலமைச்சர் திருமிகு மம்தா பானர்ஜி.
ஜார்க்கண்ட் ஆளுநர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன்.
ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு. சம்பாய் சோரன்.
தலைமைத்தோ்தல் அதிகாரி - சத்யபிரத சாகு
பிரபல இடங்கள்
மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக ரூ.7,000 கோடிக்கும் அதிகமான திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தின் ஹூக்ளியில் உள்ள அரம்பாக் நகரில் ரூ. 7,200 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஜார்க்கண்ட்மாநிலம்தன்பத்தில்ரூ.35,700 கோடிமதிப்பிலானபல்வேறுவளர்ச்சித்திட்டங்களுக்குபிரதமர்அடிக்கல்நாட்டி, நிறைவடைந்ததிட்டங்களைநாட்டுக்குஅர்ப்பணித்தார்.
இந்திய பொருளாதாரம்
தேசிய பிறப்பு குறைபாடு விழிப்புணர்வு மாதம் 2024 தொடங்கப்பட்டது – NITI ஆயோக்
நடப்பு 2023-24 நிதியாண்டின்அக்டோபர்-டிசம்பர்காலாண்டில்இந்தியப்பொருளாதாரம்எந்தசதவீதவளர்ச்சியைப்பதிவுசெய்துள்ளது - 8.4 சதவீதம்
இதரவைகள்
பிரதமர் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம்: ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ. 15 ஆயிரம் சேமிக்கும் அற்புதமான திட்டம்
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions