TNPSC Daily Current affairs - 14 March 2024
இந்தியா-இத்தாலி கூட்டு பாதுகாப்புக் குழுவின் 10-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.
லஜ்பத் நகர் முதல் சாகேத் ஜி-பிளாக் வரை மற்றும் இந்தர்லோக் முதல் இந்திரபிரஸ்தா வரையிலான தில்லி மெட்ரோ நான்காம் கட்ட திட்டங்களுக்கான இரண்டு வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
2024-ம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தின கருப்பொருள் "பெண்களுக்கு அதிகாரமளித்தல்"
ராணிப்பேட்டையில் ரூ. 9000 கோடியில் வாகன உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் ஒப்பந்தம்.
மூன்று வாரங்களுக்கு பிறகு வடக்கு காசாவில் உணவு பொருட்கள் விநியோகம் -ஐநாவின் நிவாரண பிரிவான உலக உணவுத் திட்டம்.
நேபாள பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிரதமர் - புஷ்பா கமல் தாஹால் பிரசன்னா.
அனல் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்காக என்எல்சி இந்திய நிறுவனம் & ராஜஸ்தான் அரசு அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையப்பமானது.
நாட்டின் சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த பிப்ரவரியில் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்து 5.09 சதவீதமாக உள்ளது
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பவுலர்கள் பிரிவில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்திருக்கிறார்.
பாரா உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனிஷ் நிர்வால் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்றார்.
இந்திய கடற்படையில் இரண்டு புதிய கப்பல்கள் நாட்டுக்கு அர்பணிப்பு - ஐ என் எஸ் ஆக்ரே & ஐஎன்எஸ் அக்சய்.
இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே உணவுப் பாதுகாப்புத் துறை தொடர்பான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே எரிசக்தித் திறன் மற்றும் எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பபை அதிகரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா-மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தின் அதிகாரமளித்தல் மற்றும் செயல்பாட்டு ஒத்துழைப்பு குறித்த இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
லஜ்பத் நகர் முதல் சாகேத் ஜி-பிளாக் வரை மற்றும் இந்தர்லோக் முதல் இந்திரபிரஸ்தா வரையிலான தில்லி மெட்ரோ நான்காம் கட்ட திட்டங்களுக்கான இரண்டு வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
பூடானுக்கு பெட்ரோலியம், எண்ணெய், மசகு எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருட்களை விநியோகிப்பது குறித்து இந்தியா மற்றும் பூடான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions