புஷ்பக் விண்கலம்
'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம்
இஸ்ரோ தயாரித்த ‘புஷ்பக்’ என்ற மறுபயன்பாட்டு விண்கலத்தின் (ஆர்எல்வி) மூன்றாவது தரையிறங்கும் சோதனை பெங்களூரு அருகே வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்குமறுபயன்பாட்டு விண்கலம் அவசியம்.
இதற்காக மறுபயன்பாட்டு விண்கலத்தின் மாதிரி ஒன்றை உருவாக்கி, அதை ஹெலிகாப்டரில் தூக்கிச் சென்று வானில் இருந்து விடுவித்து, விண்கலத்தை தானாகதரையிறங்க வைக்கும் சோதனையை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது.
‘புஷ்பக்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆர்எல்வி-யை ஏற்கனவே இரண்டு முறை தரையிறக்கும் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
3-வது முறை சோதனை
இந்நிலையில் 3-வது முறையாக ஆர்எல்வி தரையிறக்கும் சோதனை, கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சலக்கேரி என்ற இடத்தில்அமைக்கப்பட்டுள்ள ஏரோநாடிக்கல் பரிசோதனை மையத்தில் 23.06.2024 காலை 7.10 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது.
'புஷ்பக் என்றழைக்கப்படும் சிறகுகள் உடைய விண்கலம், விமானப்படையின் சிணுக் ரக ஹெலிகாப்டர், புஷ்பக் விண்கலத்தை வானில் 4.5 கி.மீ உயரத்துக்கு தூக்கிச் சென்று விடுவித்தது. அதன்பின் ஆர்எல்வி தானாகஇயங்கி, ஓடு பாதையில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் தரையிறங்கியது.
ஓடு பாதையில் புஷ்பக் விண்கலம் துல்லியமாக தரையிறங்கியதும், அதில் உள்ள பாராசூட் புஷ்பக் விண்கலத்தின் வேகத்தை மணிக்கு 100.கி.மீ. ஆக குறைத்தது.
அதன்பின் விண்கலத்தின் பிரேக்குகள் இயக்கப்பட்டு புஷ்பக் விண்கலம் நிறுத்தப்பட்டது.
விண்ணில் இருந்து பூமி திரும்பும் விண்கலம் மிக வேகமாக வரும் என்பதால், புஷ்புக் விண்கலம் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு தரையிறக்கப்பட்டது.
இதன்மூலம் புஷ்பக் விண்கலம் விண்ணுக்கு சென்று மீண்டும் பூமி திரும்பும் பரிசோதனைக்கு தயாராகிவிட்டது.
நாட்டின் எதிர்கால மறுபயன்பாட்டு ஏவு வாகனமான புஷ்பக், சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்பவும், சுற்றுப்பாதையில் இருந்து செயற்கைக்கோள்களை மீட்டெடுக்கவும் பயன்படும்.
முக்கிய பங்கு
இது தவிர, விண்வெளியில் குப்பையை குறைப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் செயல்பாட்டுக்கு வர பல ஆண்டு கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions