TNPSC Current Affairs - செப்டம்பர் 2023 - விளையாட்டு நிகழ்வுகள் - பகுதி 1
வரலாறு படைத்தாா் வொ்ஸ்டாபென்
எஃப்1 காா் பந்தயத்தின் இத்தாலியன் கிராண்ட் ப்ரீ ரேஸில் நெதா்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.
மோகன் பகான் சாம்பியன்
டியூரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் 132-ஆவது எடிஷனில், மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் அணி 1-0 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
கிரண் ஜாா்ஜ் சாம்பியன்
இந்தோனேசிய மாஸ்டா்ஸ் 2023 பாட்மின்டன் சூப்பா் 100 போட்டியில் இந்தியாவின் இளம் வீரா் கிரண் ஜாா்ஜ் சாம்பியன் பட்டம் வென்றாா்.
8-ஆவது முறையாக இந்தியா சாம்பியன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இலங்கையை எளிதாக வீழ்த்தி அபார வெற்றியுடன் வாகை சூடியது.
வாகை சூடினாா் கிரெஜ்சிகோவா
அமெரிக்காவில் நடைபெற்ற சான்டியாகோ ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் ஒற்றையா் பிரிவில் செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா சாம்பியன் பட்டம் வென்றாா்.
தேசிய கூடைப்பந்து 2023
தமிழகம் சாம்பியன் சென்னையில் நடைபெற்ற ‘த்ரீ எக்ஸ் த்ரீ’ தேசிய கூடைப்பந்து போட்டியில் ஆடவா் பிரிவில் தமிழகம், மகளிா் பிரிவில் கேரளம் அணிகள் சாம்பியன் ஆகின.
உலக வில்வித்தை
பிரமேஷுக்கு வெள்ளி உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஆடவா் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் பிரதமேஷ் ஜாவ்கா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
சாம்பியன் கோகோ கௌஃப்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெலாரஸின் அா்யனா சபலென்காவை 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினாா் அமெரிக்க இளம் வீராங்கனை கோகோ கௌஃப்.
யுஎஸ் ஓபன் 2023:
ஜோகோவிச் சாம்பியன் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச், 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் மார்கரெட் கோர்ட் சாதனையை சமன் செய்து அசத்தினார்.
உலகக் கோப்பை கூடைப்பந்து 2023
9-வது உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியை ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா இணைந்து நடத்தின. ஜெர்மனியும், செர்பியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. ஜெர்மனி 83-77 என்ற புள்ளி கணக்கில் செர்பியாவை சாய்த்து உலகக் கோப்பையை தட்டிச் சென்றது. 73 ஆண்டுகால உலகக் கோப்பை கூடைப்பந்து வரலாற்றில் ஜெர்மனி உலகக்கோப்பையை கையில் ஏந்துவது இதுவே முதல் முறையாகும்.
பிரக்ஞானந்தா
உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம்
டாட்டா ஸ்டீல் சர்வதேச ரேபிட் செஸ் போட்டியை தொடர்ந்து பிளிட்ஸ் செஸ் போட்டி கடந்த 2 நாட்கள் கொல்கத்தாவில் நடந்தது. முதல் நாளில் நடந்த 9 சுற்றுகள் முடிவில் 6½ புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா நேற்று நடந்த 9 சுற்றுகளில் அலெக்சாண்டர் கிரிசுக் (ரஷியா), நோடிர்பிக் அப்டுசாட்டோரோவ் (உஸ்பெகிஸ்தான்), விதித் குஜராத்தி (இந்தியா) ஆகியோருக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தார். மேலும் 3 ஆட்டங்களில் வெற்றியும், 3 ஆட்டங்களில் டிராவும் கண்டார். 18 சுற்றுகள் முடிவில் 11 புள்ளிகள் பெற்ற பிரக்ஞானந்தா 3-வது இடம் பெற்றார்.
மேக்சிம் வாசியர் லாக்ரவ்
டாட்டா ஸ்டீல் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. 9 சுற்று கொண்ட இந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரான்சின் மேக்சிம் வாசியர் லாக்ரவ் 7 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2023
உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
குகேஷ்
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறினார் குகேஷ். சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (பிடே) சார்பாக ஒவ்வொரு மாதமும் அதிகாரப்பூர்வ ரேட்டிங் பட்டியல் வெளியிடப்படும். இந்த ரேட்டிங் பட்டியலில் கடந்த 37 ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் நம்பர் 1 வீரராக இருந்தார். இந்த பட்டியலில் தமிழக வீரர் குகேஷ் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறியுள்ளார். இதன் மூலம் 37 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்தின் சாதனை பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
டைமண்ட் லீக் தடகள போட்டி 2023
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதல் பிரிவுக்கான போட்டி நடைபெற்றதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2ம் இடம் பிடித்தார். அவர் 85.71 மீட்டர் தூரம் வீசி இரண்டாம் இடம் பிடித்தார். அதேவேளை, 85.86 மீட்டர் தூரம் வீசிய ஜாகுப் வாட்லெஜ் (செக்குடியரசு) முதல் இடம் பிடித்தார். அதேபோல், நீளம் தாண்டுதல் பிரிவில் 7.99 மீட்டர் தாண்டிய இந்திய வீரர் ஸ்ரீசங்கர் 5ம் இடம் பிடித்தார்.
ஜூரிச் டையமண்ட் லீக் 2023
சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில், நடப்பு ஆண்டுக்கான ஜூரிச் டையமண்ட் லீக் 2023 போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர், முதல் முயற்சியில் 80.79 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்தபோதும், அடுத்து 2 முறை தவறுதல் ஏற்பட்டது. 4-வது முயற்சியில் 85.22 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்த சோப்ரா, 5-வது முயற்சியில் மீண்டும் தவறிழைத்தது போட்டியில் பின்னடைவை ஏற்படுத்தியது.
வித்யா ராம்ராஜ்
இந்தியன் கிராண்ட் பிரீ 5 தடகள போட்டிகள் சண்டிகரில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் இலக்கை 55.43 விநாடிகளில் கடந்தார். இது 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 4-வது இடம் பிடித்த இந்தியாவின் தங்க மங்கை என அழைக்கப்படும் பி.டி.உஷா கடந்த 55.42 விநாடிகளை விட 0.01 விநாடியே அதிகமாகும். நூலிழையில் பி.டி.உஷாவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை வித்யா ராம்ராஜ் தவறவிட்டுள்ளார்.
ரோகித் சர்மா சாதனை
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை குவித்த 6-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்தப் பட்டியலில் 18,426 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 13 ஆயிரம் ரன்களை கடந்த விராட் கோலி 13.024 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர்களைத் தொடர்ந்து கங்குலி (11.363 ரன்கள்), ராகுல் திராவிட் (10,889 ரன்கள்), எம்.எஸ்.தோனி (10,773) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions