TNPSC Current Affairs - ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2023

  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் பிரிவு 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி மற்றும வெண்கலப் பதக்கங்களை இந்தியா தட்டிச் சென்றது.

  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தைவானைச் சேர்ந்த சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.

  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 7-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.

  • ஆசிய விளையாட்டில் தடகள போட்டியில் முதல் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.

  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் 150-க்கும் அதிகமான பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்கேட்டிங்கில் தங்கப் பதக்கம் வென்று சீனாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி குயி சென்ஷி சாதனைப் படைத்துள்ளார்.

  • ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் பாய்மரப் படகு போட்டியில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

  • ஆசிய விளையாட்டு போட்டியின் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய ஆடவர் ஆணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கலப்பு இரட்டையர் டென்னிஸில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறது, இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ருத்துஜா போஸ்லே இணை. சீன தைபே இணையை வீழ்த்தி இந்த வெற்றியை இருவரும் பெற்றுள்ளனர்.

  • ஆசிய விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவு துப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் ஆகியோர் குழுவாக இணைந்து இந்தப் பிரிவில் தங்கம் வென்றுள்ளனர்.

  • ஒருநாள் கிரிக்கெட்டில் 3000 சிக்ஸர்களை அடித்த முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
Copyright@2020 Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com