TNPSC Daily Current affairs - 11 March 2024
அருணாசல பிரதேசம்
அருணாசல பிரதேசம், மணிப்பூா், மேகாலயம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் ரூ.55,600 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம் - அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, அருணாசல பிரதேச மாநிலம், இடாநகரில் நடைபெற்றது.
பிரதமா் மோடி, அருணாசல பிரதேசத்தில் 13,000 அடி உயரத்தில் இமய மலையைக் குடைந்து கட்டப்பட்ட ‘சேலா’ சுரங்கப் பாதையையும் திறந்துவைத்தாா்.
அருணாசல பிரதேசத்தில் இந்தியா கட்டியுள்ள சுரங்கப் பாதை மூலம் சீன எல்லைக்கு வீரா்களையும், ராணுவத் தளவாடங்களையும் விரைந்து அனுப்பி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோரீஷஸ் தலைநகா் போா்ட் லூயியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை விமான நிலையத்தில் வரவேற்ற மோரீஷஸ் நாட்டு பிரதமா் - பிரவிந்த் ஜக்நாத்.
உலக அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் - ஜேம்ஸ் ஆண்டர்சன்
இந்தியாவில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்தவர் வரிசையில் முதலிடம் பிடித்துள்ள அஸ்வின், உலக அளவில் ஆர்ஜெ ஆர்ட்லியுடன்(36) 3ஆம் இடத்தில் இருக்கிறார்.
புது தில்லியில் நடைபெற்று வரும் பாரா துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையில் இந்தியாவின் மோனா அகா்வால்-ஆதித்யா கிரி இணை வெள்ளிப் பதக்கம் வென்றது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் கலப்பு இரட்டையா் ஏா் )ஃரைபிள் பிரிவில் எஸ்எச்1 மோனா-ஆதித்யா இணை 12-16 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் லி மின்-யாங் இணையிடம் தோற்று வெள்ளி வென்றது.
ஐசிசி தரவரிசை: மூன்றிலும் நம்பா் 1 - இந்தியா
பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா் - இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி.
ஸ்டாக்ஹோம் சா்வதேச அமைதி ஆய்வு அமைப்பு
சா்வதேச அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா தொடா்ந்து முதலிடம் வகிக்கிறது.
இந்தியாவுக்கு ஆயுதங்களை அதிகம் விற்பனை செய்யும் நாடாக ரஷியா தொடா்கிறது.
ஸ்வீடனைச் சோ்ந்த ஸ்டாக்ஹோம் சா்வதேச அமைதி ஆய்வு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் முதன்மை பெண்மணி ஆகும் அதிபா் ஜா்தாரியின் மகள் ஆசிஃப் அலி ஜா்தாரியின் மகள் அசீஃபா புட்டோ, நாட்டின் முதன்மை பெண்மணியாக அறிவிக்கப்படவிருக்கிறாா்.
நேட்டோ கூட்டமைப்பின் 32-வது உறுப்பினராக ஐரோப்பிய நாடான ஸ்வீடன் இணைந்துள்ளது.
அருணாசலப் பிரதேசத்தை ‘தெற்கு திபெத்’ என உரிமை கொண்டாடி வரும் சீனா, இப்பகுதிக்கு ‘ஸாங்னான்’ எனப் பெயர் சூட்டி அழைத்து வருகிறது.
‘வளமான பாரதம், வளமான வடகிழக்கு’ என்ற பெயரில் அருணாசல பிரதேசம், மணிப்பூா், மேகாலயம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்ததோடு, புதிய திட்டங்களுக்கு கடந்த 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா் - பிரதமர் மோடி.
96-வது ஆஸ்கர் விருது
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது.
96-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த உறுதுணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ‘ஒப்பன்ஹெய்மர்’ படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் வென்றார்.
கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது.
இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த உறுதுணை நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த அனிமேஷன் Feature, சிறந்த ஆவணப்பட Feature, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த புரொடக்ஷன் டிசைன், சிறந்த ஒலி, சிறந்த பிலிம் எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த லைவ் ஆக்ஷன், சிறந்த ஆவணப்பட ஷார்ட் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
சிறந்த உறுதுணை நடிகர் விருதுக்கு ஐந்து பேர் பரிந்துரைக்கப்பட்டனர், இதில்
‘ஒப்பன்ஹெய்மர்’ படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர்,
’அமெரிக்கன் ஃபிக்ஷன்’ படத்தின் நடித்த ஸ்டெர்லிங் கே.பிரவுன்,
’கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன்’ படத்தில் நடித்த ராமர்ட் டி நிரோ,
‘பார்பி’ படத்தின் நடித்த ரையான் கோஸ்லிங்
‘புவர் திங்ஸ்’ படத்தில் நடித்த மார்க் ரஃபலோ ஆகியோர் பரிந்துரைப்பட்டிருந்தனர்.
இந்த பட்டியலில் தற்போது ‘ஒப்பன்ஹெய்மர்’ படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் சிறந்த உறுதுணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
வெற்றியாளர்களின் முழு பட்டியல் இதோ:
சிறந்த துணை நடிகை: Da’Vine Joy Randolph, “The Holdovers”
சிறந்த அனிமேஷன் குறும்படம்: “போர் முடிந்தது!”
சிறந்த அனிமேஷன் படம்: ”தி பாய் அண்ட் தி ஹெரான்”
சிறந்த அசல் திரைக்கதை: “அனாடமி ஆஃப் எ ஃபால்”
சிறந்த தழுவல் திரைக்கதை: ”அமெரிக்கன் ஃபிக்ஷன்”
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: ”மோசமான விஷயங்கள்”
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ”மோசமான விஷயங்கள்”
சிறந்த ஆடை வடிவமைப்பு: “புவர் திங்ஸ்”
சிறந்த சர்வதேச அம்சம்: ”“விருப்பம் மண்டலம்”
சிறந்த துணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர், ”ஓப்பன்ஹைமர்”
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ”காட்ஜில்லா மைனஸ் ஒன்”
சிறந்த படத்தொகுப்பு: ”ஓப்பன்ஹைமர்”
சிறந்தது: ஆவணப்படம் (குறுகிய பொருள்): “தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்”
சிறந்த ஆவணப்படம்: “20 டேஸ் இன் மரியுபோல்”
சிறந்த ஒளிப்பதிவு: ”ஓப்பன்ஹைமர்”
சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்): “தி வொண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்”
சிறந்த ஒலி: ”விருப்பம் மண்டலம்”
சிறந்த ஸ்கோர்: ”ஓப்பன்ஹைமர்”
சிறந்த பாடல்: ”நான் எதற்காக உருவாக்கப்பட்டது?” ″பார்பி” இலிருந்து
சிறந்த நடிகர்: சில்லியன் மர்பி, ”ஓப்பன்ஹைமர்”
சிறந்த இயக்குனர்: கிறிஸ்டோபர் நோலன், ”ஓப்பன்ஹைமர்”
சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன், “புவர் திங்ஸ்”
சிறந்த படம்: ஓப்பன்ஹைமர்
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions