நவம்பர் மாத நடப்பு நிகழ்வுகள் 2024/November-2024-daily-current-affairs-in-tamil
நவம்பர் மாத நடப்பு நிகழ்வுகள் 2024/November-2024-daily-current-affairs-in-tamil
CURRENT_EVENT-01:
👇
சென்னை மாகாணம் மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, தமிழக மாநிலமாக உருவாக்கப்பட்ட நாள் (நவம்பர் 1) தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது.
பிபிஎல் குழுமத்தின் நிறுவனர் கோபாலன் நம்பியார் காலமானார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் விதமாக ராஷ்ட்ரீய ஏக்தா கொண்டாடப்படுகிறது.
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ராணுவ விமானம் தயாரிப்பதற்கான டாடா - ஏர்பஸ் தொழிற்சாலையை குஜராத் மாநிலம் வடோதராவில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உடன் இணைந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
வேற்று கிரக ஆராய்ச்சிக்கு மையம்: லடாக்கில் தொடங்கியது இஸ்ரோ
சர்க்கரை நோயாளிகளுக்கான ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் 5-ம் தேதி தொடங்குகிறது கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி
2026 காமன்வெல்த் போட்டி: கிரிக்கெட், ஆக்கி , பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகள் நீக்கம்.
காஷ்மீரில் முதல்முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி; 2 ஆயிரம் பேர் பங்கேற்பு.
2024-ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு
விண்வெளித்துறை சார்ந்ததொரு நூலுக்கு இத்தகைய கௌரவம் கிடைப்பது இதுவே முதல்முறையாகும். பிரிட்டனில் இந்தாண்டு அதிகம் விற்பனையான புத்தகமும் இதுவே. அதற்கான முக்கிய காரணம், விண்வெளிக்கு செல்லும் வீரர்களைக் குறித்து இப்புத்தகத்தில் சுவாரசியமாகக் கதை சொன்ன விதம்தான். ‘ஆர்பிட்டல்’ நாவலில் சமந்தா ஹார்வே உள்ளீட்டுள்ள வரிகளை, புக்கர் பரிசு நடுவர் குழு வெகுவாகக் பாராட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. லண்டனில் உள்ள வரலாற்றுப் பாரம்பரியமிக்க ஓல்டு பில்லிங்ஸ்கேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமந்தா ஹார்வேக்கு புக்கர் பரிசளித்து கௌரவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் ரொக்கமாக 50,000 யூரோ(இந்திய மதிப்பில் சுமார் ரூ. 54.50 லட்சம்) தொகையையும் பெற்றுள்ளார் சமந்தா ஹார்வே.
24 மணி நேரத்தில் விண்வெளி வீரர்கள் சந்திக்கும் அனுபவங்களின் தொகுப்பே 136 பக்கங்களை உள்ளடக்கிய ‘ஆர்பிட்டல்’ நாவல்! முன்னதாக, 1979-ஆம் ஆண்டு பெனெலோப் ஃபிட்ஸ்ஜெரால்ட் எழுதிய ‘ஆஃப்ஷோர்’ என்ற நாவலுக்காக அவருக்கு புக்கர் பரிசளிக்கப்பட்டது. புக்கர் பரிசு வென்ற நூல்களில் குறைந்த பக்கங்களைக் கொண்ட நாவலாக ‘ஆஃப்ஷோர்’ திகழ்கிறது. 132 பக்கங்களில் இந்நாவலை படைத்திருப்பார் எழுத்தாளர் பெனெலோப் ஃபிட்ஸ்ஜெரால்ட். இதற்கு அடுத்த இடத்தில், குறைந்த பக்கங்களைக் கொண்ட நாவலாக சமந்தா ஹார்வேயின் ‘ஆர்பிட்டல்’ உள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டுக்கு பின், பெண் எழுத்தாளர் ஒருவர் புக்கர் பரிசை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. புக்கர் பரிசின் கடந்த 55 ஆண்டு கால வரலாற்றில், இந்தாண்டு பெண் எழுத்தாளர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. இறுதிப்பட்டியலில் தேர்வான சமந்தா ஹார்வே உள்ளிட்ட மொத்தம் 6 எழுத்தாளர்களில் ஐவர் பெண்கள் ஆவர். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியீடாகும் நூல்களுக்கு, இலக்கியத் துறையின் உயரிய கௌரவங்களில் ஒன்றான ‘புக்கர் பரிசு’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அருந்ததி ராய், 1997 ஆம் ஆண்டு தனது 'காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' நாவலுக்காக மதிப்புமிக்க மேன் புக்கர் பரிசை வென்ற இந்தியாவின் முதல் பெண்மணி ஆவார். அவர் புத்தக எழுத்தாளர் மற்றும் ஆர்வலர் ஆவார். மேன் புக்கர் பரிசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புனைகதை புத்தகத்திற்கு வழங்கப்படுகிறது. |
டபிள்யுடிஏ பைனல்ஸ் கோப்பை
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்த டபிள்யுடிஏ பைனல்ஸ் கோப்பைக்கான டென்னிஸ் இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் கோகோ காப், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற சீனாவின் செங் குய்ன்வென் மோதினர்.
டபிள்யுடிஏ பைனல்ஸ் கோப்பைக்கான டென்னிஸ் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சீனாவின் செங் குய்ன்வென்னை வென்று கோப்பையை கைப்பற்றினார்.
இந்த வெற்றியை அடுத்து போட்டிக்கான கோப்பையும், ரூ. 4 கோடி ரொக்கப்பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்:
மாஸ்டர்ஸ் பிரிவில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.
லெவோன் அரோனியன், அரவிந்த் சிதம்பரத்துடன் டை பிரேக்கரில் பலப்பரீட்சை நடத்தினார். இதில் இரு ஆட்டங்களிலும் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு சாம்பியன் பட்டத்துடன் ரூ.11 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அரவிந்த் சிதம்பரம், தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் ஆவார்.
2-வது இடம் பிடித்த லெவோன் அரோனியனுக்கு ரூ.11 லட்சமும், 3-வது இடம் பிடித்த இந்தியாவின் அர்ஜுன் எரிகைசிக்கு ரூ.11 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி
ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒலிம்பிக் போட்டி (2024ம் ஆண்டு), பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது. இதையடுத்து, 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ளது.
தொடர்ந்து, 2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடக்க உள்ளது. இதையடுத்து, 2036ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தாதாசாகேப் பால்கே விருது 2024 | மிதுன் சக்ரவர்த்தி |
உலக விண்வெளி விருது | இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் |
2024 சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு | அலெக்சாண்டர் டன் |
5வது தேசிய நீர் விருதுகள் | ஒடிசா |
அக்கினேனி நாகேஸ்வர ராவ் தேசிய விருது | சிரஞ்சீவி |
பிஜியின் உயரிய சிவிலியன் விருது | ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் |
ஹாரி மெஸ்ஸல் விருது | பிபாப் குமார் தாலுக்தார் |
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions