TNPSC Daily Current affairs - 10 March 2024
இந்தியாவில் முதல்முறையாக மாநில அரசின் ‘ஓடிடி’ தளம்: கேரளத்தில் தொடக்கம்
இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படை(பிஎஸ்எஃப்), வங்கதேச எல்லை காவல் படையின் (பிஎஸ்ஜி) தலைமை இயக்குநா்கள் பங்கேற்ற 54-ஆவது பேச்சுவாா்த்தை கூட்டம் வங்கதேச தலைநகா் டாக்காவில் கடந்த மாா்ச் 5 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது.
தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜிநாமா
தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய தலைவராக கிஷோா் மக்வானா நியமனம்.
அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் (மார்ச் 9, 2024) நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த வடகிழக்குப் பகுதி நிகழ்ச்சியில், அருணாச்சலப் பிரதேசத்தின் லோயர் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் தேசிய நீர்மின் கழகத்தின் 2,880 மெகாவாட் திபாங் பல்நோக்கு நீர்மின் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்தியா மற்றும் 4 ஐரோப்பிய நாடுகளின் தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (மாா்ச் 10) கையொப்பமாகிறது.
நாட்டின் கூட்டுறவுத் துறையின் திறன்மிக்க செயல்பாட்டுக்கு பங்களிக்கும் ‘தேசிய கூட்டுறவு தரவுதளத்தை’ மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைத்தாா்.
ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் 3 நாள் தேசிய பால் பண்ணை மற்றும் வேளாண் கண்காட்சியை மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா தொடங்கி வைத்தார்.
தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி யார்?
தற்போதைய தலைமை நீதிபதியாக தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் என்பவர் 09 நவம்பர், 2022 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்.
சேலா சுரங்க வழிச் சாலை
சேலா சுரங்கப்பாதை கட்டுமானத்திற்கு பிரதமர் மோடி 2019, பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார்.
அருணாசலப் பிரதேசத்தில் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப் பாதை திறப்பு
அருணாசலப் பிரதேசத்தின் டவாங் பகுதியில் பாலிபாரா - சரித்வார் - தவாங் சாலை மார்க்கத்தில் அனைத்து பருவநிலைகளிலும் சாலை பயணத்தை எளிதாக்கும் வகையில் அமைந்துள்ள ’சேலா சுரங்க வழிச் சாலையை’ பிரதமர் மோடி மார்ச்.9 கொடியசைத்து திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
டவாங் பகுதியில் பாலிபாரா - சரித்வார் - தவாங் சாலை மார்க்கத்தில் அமைந்துள்ள சேலா சுரங்க வழிச் சாலை வாயிலாக கடும் பனிப்பொழிவு, பெருமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் சிரமமின்றி பயணிக்கலாம்.
ரூ.825 கோடியில் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையாக கட்டப்பட்டுள்ள சேலா சுரங்கப்பாதை பொறியியல் வல்லுநர்களின் திறனை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
இத்திட்டம் நவீன ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதால், உயர் தரத்திலான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions