அக்டோபர் மாத நடப்பு நிகழ்வுகள் 2024/October-2024-daily-current-affairs-in-tamil

அக்டோபர் மாத நடப்பு நிகழ்வுகள் 2024

CURRENT_EVENT-01:

👇

சுனிதா வில்லியம்ஸ்

  • அமெரிக்காவின் போயிங் நிறுவனம், நாசா விண்வெளி மையத்துடன் இணைந்து ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை தயாரித்து உள்ளது.

  • புதிய விண்கலத்தில் பயணம் செய்து, தரச் சான்று அளிக்கும் பொறுப்பு சுனிதா வில்லியம்ஸிடம் வழங்கப்பட்டது.

  • இதன்படி கடந்த ஜூன் 5-ம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு 8 நாட்கள் பயணமாக சுனிதா சென்றார்.

  • ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா தங்கியிருக்கிறார்.

  • அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் சுனிதாவை பூமிக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டு உள்ளது.

CURRENT_EVENT-02:

👇

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு

  • ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

  • 9-வது ஆயுர்வேத தினம் மற்றும் மருத்துவ கடவுளான தன்வந்தரி பகவானின் பிறந்த நாளை ஒட்டி டெல்லியில் அரசு நலத்திட்ட விழா நடைபெற்றது.

  • ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

  • இதன்படி 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும். புதிய திட்டத்தின் மூலம் 6 கோடி மூத்த குடிமக்கள் பயன் பெறுவார்கள்.

  • டெல்லி யூனியன் பிரதேசம் மற்றும் மேற்குவங்க அரசுகள் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் இணையவில்லை.

CURRENT_EVENT-03:

👇

உலக சிக்கன நாள்

  • பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது.

  • மக்கள் தங்கள் வாழ்நாளில் சிக்கனமாக செலவு செய்து, வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பாக்கி, எதிர்காலத்தில் பெரும் பயனடைந்து, வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது.

CURRENT_EVENT-04:

👇

வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிப்பு

  • தமிழகத்தில் வெப்ப அலையை மாநில பேரிடராக அரசு அறிவித்துள்ளது.

  • வெப்ப அலையால் உயிரிழப்போர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  • மாநில பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளின்படி, வெப்ப அலை பாதிப்புக்கு தடுப்பு நடவடிக்கை எடுக்கவும், உரிய நிவாரண வழங்கவும், வெப்ப அலை வீச்சை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும்.

CURRENT_EVENT-05:

👇

ஜார்க்கண்ட் தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ எம்.எஸ். தோனி நியமனம்

  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சட்டப்பேரவைத் தேர்தலுக்கான போஸ்டர்களில் தனது புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள தோனி அனுமதி அளித்துள்ளார் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி கே.ரவி குமார் தெரிவித்துள்ளார்.

  • SWEEP (வாக்களர்களுக்கான முறையான கல்வி மற்றும் வாக்குப்பதிவில் பங்கேற்பு)-ன் கீழ் தோனி வாக்காளர்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பணியினை செய்வார்.

  • ஜார்க்கண்ட்டில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13, 20 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

CURRENT_EVENT-06:

👇

இஓஎஸ்-06 மற்றும் இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோள்கள்

  • இஓஎஸ்-06 மற்றும் இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோள்கள் வங்கக்கடலில் நிலவும் டானா புயலை தொடர்ந்து கண்காணித்து தகவல்களை வழங்கி வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

  • வங்கக்கடலில் அதிதீவிர புயலாக நிலவும் டானா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • இதற்கிடையே கடந்த அக்டோபர் 20-ம் தேதி கடலில் புயல் சின்னம் உருவானது முதல் அதன் மாற்றங்கள், திசை, பாதிப்புகள் மற்றும் அது தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை வானிலை ஆய்வு மையத்துக்கு இஸ்ரோ அளித்து வருகிறது.

  • புவி கண்காணிப்புக்காக செலுத்தப்பட்ட இஓஎஸ்-06 மற்றும் இன்சாட் 3டிஆர் ஆகிய செயற்கைக்கோள்கள் தற்போது புயல் கண்காணிப்பு பணிகளில் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

CURRENT_EVENT-07:

👇

சஞ்சீவ் கண்ணா

  • சஞ்சீவ் கண்ணா 1960-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர்.

  • 1980-ம் ஆண்டு டெல்லி ஸ்டீபன் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

  • 2016-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

  • பின்னர், 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

  • தேர்தல் பத்திர நடைமுறையை ரத்து செய்த ஐந்து நீதிபதி அமர்வில் சஞ்சீவ் கண்ணாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம் செய்யப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.

  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக் காலம் வரும் நவம்பர் 10-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.

  • அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயரை சந்திரசூட் சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தார்.

  • அவரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார்.

  • உச்ச நீதிமன்றத்தின் 51-வது புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா வரும் நவம்பர் 11-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

  • 2025 மே 13-ம் தேதி வரை 6 மாதங்களுக்கு அவர் தலைமை நீதிபதியாக செயல்படுவார்.

  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் சந்திரசூட் பதவியேற்றார்.

  • உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கான ஓய்வு வயது 65 ஆகும்.

  • சந்திரசூட்டுக்கு அடுத்த நிலையில் மூத்த நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா உள்ளார்.

CURRENT_EVENT-08:

👇

விஜயா கிஷோர் ரஹாத்கர்

  • தேசிய மகளிர் ஆணைய தலைவராக விஜயா கிஷோர் ரஹாத்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

  • தேசிய மகளிர் ஆணைய சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

  • 3 ஆண்டு காலம் அல்லது 65 வயது இதில் எது முன்போ அதுவரை பதவியில் இருப்பார்.

  • மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவரான விஜயா கிஷோர் ரஹாத்கர், பாஜகவின் தேசிய செயலாளராகவும், ராஜஸ்தான் மாநில பொறுப்பாளராகவும் இருந்தவர்.

  • இயற்பியலில் இளநிலை பட்டமும், வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 2007 முதல் 2010 வரை அவுரங்காபாத் மாநகராட்சி மேயராக பதவி வகித்தவர்.

  • தேசிய மகளிர் ஆணைய தலைவராக இருந்தவர் ரேகா சர்மா. இவரது பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதியுடன் முடிந்தது.

CURRENT_EVENT-09:

👇

உலக விண்வெளி விருது 2024

  • ஐஏஎப் உலக விண்வெளி விருது வழங்கும் விழா மற்றும் சர்வதேச விண்வெளி கருத்தரங்கம் இத்தாலி நாட்டின் தலைநகரான மிலன் நகரில் அண்மையில் நடந்தது.

  • இதில் இஸ்ரோ அமைப்பின் சார்பில் இந்தியா முன்னெடுக்கும் விண்வெளி ஆய்வு பணிகளுக்கும், சந்திரனின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3 திட்ட பணிகளுக்கும் வெகுவாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

  • இந்த அங்கீகாரம் விண்வெளி ஆய்வு துறையில் இந்தியா செய்த பங்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது.

  • இத்தாலியில் நிகழ்ந்துள்ள இந்த சாதனை புதிய இலக்குகளை நோக்கி பயணப்பட வைத்துள்ளது.

  • குறைந்த பொருட்செலவில் நேர்த்தியான பொறியியல் அறிவியலைக் கொண்டு ச‌ந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்று, இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஐஏஎப் பாராட்டியுள்ளது.

  • இந்த திட்டத்தில் ஏற்பட்ட சவால்களை வெற்றிகரமாக எதிர் கொண்டு, குழுவினரை இலக்கை அடைய செய்ததில் சோம்நாத்தின் பங்கு மகத்தானது.

  • அவரது வழிகாட்டுதலின்படியே, சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

  • இந்த வெற்றியின் மூலம் உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. சந்திரன் குறித்த புதிய ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக மாறியுள்ளது.

  • விண்வெளி தினம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில், இந்த நாளை தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

CURRENT_EVENT-10:

👇

நயாப் சிங் சைனி

  • ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி 2-வது முறையாக பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தே.ஜ. கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

  • ஹரியானாவில் கடந்த 5-ம் தேதிநடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், மொத்தம் உள்ள 90 இடங்களில் 48 இடங்களில் பாஜக வெற்றி பெற்று, 3-வது முறையாக ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 37 இடங்களை கைப்பற்றியது.

  • சண்டிகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள்கூட்டத்தில், ஹரியானா சட்டப்பேரவை பாஜக தலைவராக முதல்வர் நயாப் சிங் சைனி (54) மீண்டும்தேர்வு செய்யப்பட்டார்.

CURRENT_EVENT-11:

👇

One-Liner-Oct-2024

  • எந்த பெண் கால்பந்து வீராங்கனை 2024 இல் பெண்கள் பலோன் டி'ஓர் விருதை வென்றார்- ஐதானா பொன்மதி

  • ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆயுர்வேத தினம் எப்போது கொண்டாடப்படுகிறது- 29 அக்டோபர்

  • மேத்யூ வேட் சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், அவர் எந்த நாட்டின் வீரர்- ஆஸ்திரேலியா

  • ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஆன்லைன் பேமென்ட் அக்ரிகேட்டர் பிசினஸ்- ஜியோ பைனான்சியல் யாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

  • ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சதங்கள் அடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார்- ஸ்மிருதி மந்தனா

  • இமாச்சலப் பிரதேசத்தின் எந்த நகரத்தில் மாநிலத்தின் முதல் டிஜிட்டல் நூலகம் திறக்கப்பட்டது- பிலாஸ்பூர்

  • புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒற்றுமைக்கான ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தவர் - அமித் ஷா

  • Ballon d'Or 2024 ஆண்களுக்கான சிறந்த வீரர் விருதை வென்றவர்- ரோட்ரி

  • இந்தியக் கடலோரக் காவல்படை சமீபத்தில் அறிமுகப்படுத்திய இரண்டு உள்நாட்டு ரோந்துக் கப்பல்களின் பெயர்கள்- ' ஆதம்யா' மற்றும் 'அக்ஷர்'

  • நாட்டின் முதல் 'எழுத்தாளர்கள் கிராமம்' எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது- உத்தரகாண்ட்

  • சமீபத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர்- விபின் குமார்

CURRENT_EVENT-02:

👇

Press Information Bureau Government of India

CURRENT_EVENT-02:

👇

  • பாரத் சீரம் மற்றும் தடுப்பூசிகள் லிமிடெட் நிறுவனத்தை மேன்கைண்ட் பார்மா லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்த இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

  • இந்திய திவால் மற்றும் நொடித்துப் போதல் வாரியம் தனது எட்டாவது ஆண்டு தினத்தைக் கொண்டாடியது.

  • வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அதன் அமைப்புகள் தூய்மையை நிறுவனமயமாக்குவதற்கும் நிலுவையில் உள்ள விஷயங்களை அனுமதிப்பதற்கும் சிறப்பு பிரச்சாரம் 4.0 இல் பங்கேற்கின்றன.

  • 2024, அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாளை தூய்மை இந்தியா தினமாக நாடு கொண்டாடுவதை முன்னிட்டு, தூய்மை இந்தியா இயக்கத்தின் 10-வது ஆண்டைக் கொண்டாடவும், இந்தியாவை தூய்மையாகவும், குப்பைகள் இல்லாமலும் மாற்ற அனைவரின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையிலும், மற்ற அமைச்சகங்களுடன் இணைந்து மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, ஜல் சக்தி அமைச்சகம் ஆகியவை 2024, செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை 'தூய்மையே சேவை' இயக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. இதன் கருப்பொருள் "தூய்மைப் பழக்கம்-தூய்மைக் கலாச்சாரம்."

  • நித்தி ஆயோக் அமைப்பு புதுதில்லியில் உள்ள மானெக்சா மையத்தில் 2024, அக்டோபர் 17-18 வரை இரண்டு நாள் சர்வதேச மெத்தனால் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை நடத்த உள்ளது.

  • தூய்மை, வெளிப்படைத்தன்மை, நிர்வாகத்தில் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் இலக்கு வைக்கப்பட்டு மேற்கோள்ளப்பட்ட நடவடிக்கைகளை புவி அறிவியல் அமைச்சகம் நிறைவு செய்தது.

  • மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி 'தூய்மையே சேவை' என்ற பிரச்சாரத்தின் கீழ் தூய்மை இயக்கத்திற்கு தலைமை தாங்கினார்.

  • பாரத் டெக்ஸ் 2025 சர்வதேச அளவில் உத்வேகம் பெற்று வருகிறது : மத்திய ஜவுளி அமைச்சகம் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் கலந்துரையாடல் அமர்வுக்கு ஏற்பாடு.

  • அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு (ADC) வங்கியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு.

  • அறிவுசார் சொத்துரிமை மற்றும் ஆயுஷ் முறைகளில் வணிகமயமாக்கல் குறித்த வட்டமேஜை மாநாடு ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

  • புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் 8-வது ஆண்டு நிறுவன தின விழாவில் குடியரசுத் தலைவர் இன்று பங்கேற்றார்.

  • 'ஆயுர்வேத தினம் 2024'அக்டோபர் 29 அன்று 150 நாடுகள் கொண்டாட உள்ளன.

  • பிரதமரின் இ-டிரைவ் திட்டம் : பசுமை எதிர்காலத்தை நோக்கிய வாகனப் போக்குவரத்து முன்முயற்சி.

  • மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  • பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவுத்திட்டம் மற்றும் இதர நலத்திட்டங்களின் கீழ் வழங்கப்படும் இலவச செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை டிசம்பர் 2028 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • குஜராத் மாநிலம் லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

  • இன்-ஸ்பேஸ் திட்டத்தின் கீழ் விண்வெளித் துறைக்கு ரூ. 1,000 கோடி தனியார் கூட்டு மூலதனத்தை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  • தேசிய நெடுஞ்சாலைகளில் வசதியான பயணம் தொடர்பான 'ஹம்சஃபர் கொள்கை' - மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி வெளியிட்டார்.

  • தில்லியில் நடைபெற்ற 12-வது சிஐஐ உயிரி எரிசக்தி உச்சி மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றினார்.

  • தேசிய பாதுகாப்புப் படையின் 40-வது உதய தினத்தையொட்டி துணிச்சலான வீரர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பு முயற்சிகளுக்கு மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி பாராட்டு.

  • மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி சர்வதேச மெத்தனால் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

  • சாலைகள், பாலங்கள் கட்டுமானத்தில் நவீன தொழில்நுட்பங்கள்- போபாலில் இரண்டு நாள் மாநாட்டை மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

  • தேர்தல் ஆணையத்தின் சுவிதா 2.0 செல்பேசி செயலி மூலம் பிரசார அனுமதி கோரி விண்ணப்பிப்பதில் வேட்பாளர்களுக்கும் கட்சிகளுக்கும் கூடுதல் வசதி.

  • தேசிய மனித உரிமைகள் ஆணைய நிறுவன தினம் மற்றும் மூத்த குடிமக்களின் உரிமைகள் குறித்த தேசிய மாநாடு.

  • திரு தர்மேந்திர பிரதான் 3 செயற்கை நுண்ணறிவு – சுகாதாரம், வேளாண்மை மற்றும் நீடித்த நகரங்களுக்கான திறன் மேம்பாட்டு மையங்களை 2024 அக்டோபர் 15 அன்று தொடங்கி வைக்கிறார்.

  • சுகாதாரம், வேளாண்மை, நிலைத்தன்மை நகரங்கள் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் 3 சிறப்பு திறன் மையங்களை திரு தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

  • சிட்னியின் மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் உள்ள மெக்குவாரி பூங்கா புதுமை கண்டுபிடிப்பு மாவட்டத்தை திரு தர்மேந்திர பிரதான் பார்வையிட்டார்.

  • கங்கை திருவிழா 2024 நவம்பர் 4 ஆம் தேதி ஹரித்வாரில் உள்ள சண்டி படித்துறையில் நடைபெறும்.

  • குவஹாத்தியில் 04.10.2024 அன்று வடகிழக்கு மாநிலங்களுடன் 6-வது பிராந்திய கூட்டம்: மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே பங்கேற்பு.

  • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான 'இஷ்ரம்-ஓரிடத் தீர்வை' டாக்டர் மன்சுக் மாண்டவியா 2024, அக்டோபர் 21 அன்று தொடங்கிவைக்கிறார்.

Please sign-in to download materials.

SIGN IN

We store only your email, name and will not be shared with others.

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
Copyright@2020 Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com