TNPSC Current Affairs - செப்டம்பர் 2023 - விளையாட்டு நிகழ்வுகள் - பகுதி 2
கோ கோ காஃப்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரஸின் அரினா சபலெங்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் 19 வயதான அமெரிக்காவின் கோ கோ காஃப். இதன் மூலம் 1999-ம் ஆண்டுக்குப் பின்னர் இளம் வயதில் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை அவர், பெற்றுள்ளார். அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றுள்ள கோ கோ காஃபுக்கு பரிசுத்தொகையாக சுமார் ரூ.24.93 கோடி வழங்கப்பட்டது.
பிரதமேஷ் ஜாவ்கர்
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி மெக்சிகோவின் ஹெர்மோசில்லோவில் நடைபெற்றது. இதில் ஆடவருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரதமேஷ் ஜாவ்கர், டென்மார்க்கின் மத்தியாஸ் புல்லர்டனை எதிர்த்து விளையாடினார். இதில் இருவரும் தலா 148 புள்ளிகள் குவித்தனர். இதனால் வெற்றியை தீர்மானிக்க ஷூட் ஆஃப் கடைபிடிக்கப்பட்டது. இதிலும் இருவரும் தலா 10 புள்ளிகள் பெற்றனர். எனினும் மத்தியாஸ் புல்லர்டன் செலுத்திய அம்பு மையப்பகுதிக்கு மிக அருகாமையில் இருந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த பிரதமேஷ் ஜாவ்கர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
கிரண் ஜார்ஜ்
100 புள்ளிகள் கொண்ட இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தோனேஷியாவின் மேடன் நகரில் நடைபெற்று வந்த இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 50-ம் நிலை வீரரான இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 82-ம் நிலை வீரரான ஜப்பானின் கூ தகாஹாஷியை எதிர்த்து விளையாடினார். 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிரண் ஜார்ஜ் 21-19, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்க ஓபன்
நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் மேத்வதேவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஜோகோவிச். இது அவர் வெல்லும் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். பட்டம் வென்றதும் உடனடியாக தான் அணிந்திருந்த ஜெர்ஸியை மாற்றி கடந்த 2020-ல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு (Kobe Bryant) தனது அஞ்சலியை ஜோகோவிச் செலுத்தி இருந்தார். அவரது ஜெர்ஸி எண் 24 என்பது குறிப்பிடத்தக்கது.
பீலே சாதனையை முறியடித்தார் நெய்மர்
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று தொடங்கி உள்ளது. இதில் தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதி சுற்றில் நேற்று பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் - பொலிவியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ரோட்ரிகோ (24 மற்றும் 53-வது நிமிடங்கள்), நெய்மர் (61 மற்றும் 90 3 நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்களும் ரஃபின்ஹா (47-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர். இந்த ஆட்டத்தில் இரு கோல்கள் அடித்ததன் மூலம் பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்திருந்த மறைந்த ஜாம்பவான பீலேவின் சாதனையை முறியடித்துள்ளார் நெய்மர். 3 முறை உலகக் கோப்பையை வென்றிருந்த பீலே 92 ஆட்டங்களில் விளையாடி 77 கோல்கள் அடித்திருந்தார். தற்போது நெய்மர் 78 கோல்கள் அடித்து பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சென்னையில் ஐஎடிஃஎப் டென்னிஸ் தொடர்
பிரசிடென்சி கிளப் சார்பில் சர்வதேச ஐடிஎப் மூத்தோர் டென்னிஸ் போட்டி சென்னையில் வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. 4 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்த தொடரின் ஆட்டங்கள் பிரசிடென்சி கிளப் மற்றும் எஸ்டிஏடி டென்னிஸ் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. 35, 45 மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டோர் என 3 பிரிவுகளில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த தொடரில் தென் இந்தியாவில் முதன்முறையாக பெண்கள் கலந்து கொள்கின்றனர்.
சர்வதேச டென்னிஸ் சங்கம், அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும் இந்தப் தொடரின் மொத்த பரிசு தொகை ரூ.2.10 லட்சமாகும்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் திருநங்கை
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் முதல் திருநங்கை என அறியப்படுகிறார் டேனியல் மெக்காஹே (Danielle McGahey). ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை 2024 தொடருக்கான அமெரிக்க குவாலிபையர் தொடரில் விளையாட கனடா அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். 29 வயதான அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். கடந்த 2020-ல் அவர் கனடாவில் குடியேறியுள்ளார். 2021-ல் திருநங்கையாக மாறியுள்ளார்.
முருகப்பா ஹாக்கி
அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியன் ரயில்வேஸ் அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. 94-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வேஸ் அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
துராந்த் கோப்பை
நடப்பு (2023) துராந்த் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மோஹன் பகான் அணி. இறுதிப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது அந்த அணி. கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரையில் துராந்த் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடர் கடந்த 1888-ல் தொடங்கியது. ஆசியாவில் நடைபெறும் பழமையான கால்பந்து தொடராக அறியப்படுகிறது.
17 முறை சாம்பியன்: நடப்பு துராந்த் கோப்பை தொடரை வென்றதோடு சேர்த்து மொத்தமாக 17 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மோஹன் பகான். இதன் மூலம் இந்த தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாகவும் அந்த அணி திகழ்கிறது.
இளவேனில் வாலறிவன்
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2023: பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்
நீரஜ் சோப்ரா
யூஜினில் நடைபெற்ற டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிபதக்கத்தை வென்றார்.
உலகக் கோப்பை கூடைப்பந்து 2023
19-வது உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியை ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. 73 ஆண்டுகால உலகக் கோப்பை கூடைப்பந்து வரலாற்றில் ஜெர்மனி உலகக்கோப்பையை கையில் ஏந்துவது இதுவே முதல் முறையாகும்.
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions